Sunday, 29 January 2012

காந்தி அஞ்சலி

இன்று மகாத்மா அஞ்சலி செலுத்தும் நாள் . பாரதத்தின் தந்தையை கும்பிட்ட கையில் மரணத்தை பாய்ச்சியவர் ஒரு இந்து ஆனதா ல் அவரினத்தை வெறுக்கும் பண்பு உண்டோ .. ராணுவபிடிக்கு போகாமல் இந்திய குடியரசு காத்த இந்திரா காந்தியை நம்பிக்கையான காவலாளியே தொலைத்தான் என்றால் அவனினத்தை தொலைத்தோமா.. ராஜீவ் காந்தி உலக அரங்கில் நம் நாட்டை தற்காத்து மேம்படைய சென்றவழிக்கு புரியாத சுயநலமாய் சாய்த்த இலங்கைத்தமிழனை விட்டுக்கொடுத்தலும் நடப்பதுண்டோ.. இம்மரணங்கள் இந்திய பண்பாட்டின் விதியானால் நமக்கு நல்ல தலைவர்கள் எப்படி கிடைப்பார்கள்.. ? அத்தகைய தலைவர்களை போற்றும் பண்பு , சுயநலமில்லாத போக்குடன் நம் அனைவரிடமும் மிளிர வேண்டும். பல வேற்றுமைகளில் ஒற்றுமை காண்பதே நமது சிறப்பாக இருக்கட்டும். இதுவே நாம் காந்தியிடம் கற்ற , கற்கும், மற்றும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் பண்பாகும்.



ஒரு சிந்தனையின் 
வெளிப்பாடு... 






 கோதைதனபாலன்.

No comments:

Post a Comment