ஈ .வே .ரா.பெரியார் & ராஜாஜி
![]() |
நான் அறிந்த ,போற்றும் எதிரெதிர் முனை தலைவர்கள்
சமூகதிற்காக, சமூக விழிப்புனர்வுக்காக
பாடுபட்டவர்பெரியார்.தலையாய தொண்டு மக்கள் மனதில் பலவகையில் போர்த்திருந்த மூடநம்பிக்கைகளை களைந்ததுதான். என்ன ., இதில் அவர் முரட்டு சொற்களை கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலை ;எழ மாட்டேன் என்பவனை தட்டித்தானே எழுப்பவேண்டும் . எப்படியோ அவனையும் சிந்திக்க வைத்து நம்மவரின் பகுத்தறிவுக்கு வித்திட்டார். அவ்வமயம் நம்மிடம் பரவலாக பரிமளித்திருந்த ஏற்ற தாழ்வுகளை உடைத்தெறிந்தார். இன்றைய இடஒதுக்கீடு கொள்கைக்கு முன்னோடி. இது நடக்காதிருந்தால் இன்றைக்கும் ஒரு சாரார் மட்டுமே முன்னேற ஏனையோர் பின்தங்கியே இருந்திருப்பர். இது இன்றளவும் கண்கூடு. தன்னம்பிக்கை,சுயமரியாதை அடக்கிய நாத்திகத்தை கடைப்பிடித்தவர். இவருக்கும் காந்திக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.அவர் கட்சி சாராது கொள்கையில் வாழ்ந்து வென்றவர்: இவர் திராவிட இயக்கத்தை சமுதாய கொள்கைக்கு அர்ப்பணித்தவர்.இருவரும் அரசியல் கடந்து நின்றவர்கள்.
ராஜாஜி அவர்கள் ஒரு உண்மையான ஹிந்துவாக இலக்கியம்,அரசியல்,அறத்
துறைகளில் கோலோச்சியவர்.ராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.அரசியல் பண்பாளர்.குலத்தொழில் கல்வி கொண்டுவர விரும்பியவர்.அதுவே இந்தஅறிவாளருக்கு பலவீனமானது. ஆக ,இருவரும்
நம் தமிழ் மண்ணில் நம்மிடையே வாழ்ந்து காலத்தை வென்று காட்டியவர்கள்.வேறுபட்ட கருத்துடையவரானாலும் நல்ல நண்பர்களாகவே வாழ்ந்த பண்பாளர்கள் என்றால் மிகையாகாது.
பெரியார்- ஈரோட்டை சேர்ந்தவர். ராஜாஜி - சேலத்தை சேர்ந்தவர்.



No comments:
Post a Comment