Friday, 21 September 2012

Open Window 1: Arignar Anna.

Open Window 1: Arignar Anna.: நான் அறிந்த அண்ணா ! இன்று அறிஞரின் அண்ணாவின் பிறந்தநாள். இவர் ஒரு சீர்திருத்தக் கலைஞராக பரிமளிக்கும் போதே சமுதாயக் கட்சியான திராவிடக் க...

Arignar Anna.


நான் அறிந்த அண்ணா !

இன்று அறிஞரின் அண்ணாவின் பிறந்தநாள். இவர் ஒரு சீர்திருத்தக் கலைஞராக பரிமளிக்கும் போதே சமுதாயக் கட்சியான திராவிடக் கழகத்தில் தன்னை இணைத்து, சமூக அவலங்களை மக்கள் மனதில் உறைக்கும் படி எழுதி வந்தவர். சிறந்த பேச்சாளர். படிப்ப

ாளியும் கூட. ஒரு கட்டத்தில் சீர்திருத்தங்கள் மக்களைச் சென்று அடைய வேண்டுமென்று மேடைப் பேச்சோடு, மேடை நாடகங்களையும், திரைக்கதைகளையும் ஒரு சேர நடத்தி அதில் வெற்றி கண்டவர். அந்த வகையில், வேலைக்காரி, ஓர்இரவு, தெய்வத்தின் தெய்வம் , கள்வனின் காதலி போன்ற திரைப் படங்கள் வெளியாகின. இந்த தொடர்ச்சியே பராசக்தியும் வெளி வந்த விதமாயிற்று. பாரதி பெண் விடுதலையைப் பற்றி பாடினான் என்றால், இவர் ,பால்ய விவாகத்தை தவிர்த்தார். விதவைத் திருமணத்தை அங்கீகரித்தார். சமூக விழிப்புணர்வு பெண்களுக்கு நிச்சயம் வேண்டும் என்று வழியுறுத்தியவர். அன்றும் கண்மூடித்தனமாய் துறவிகளை நம்புதலும், பதின்மூன்றே வயது ஆன சிறுமிகளை ஐம்பது வயது கிழவனுக்கு கட்டி வைக்கும் நிலை நிறைந்த அளவில் இருந்தது. அச்சிறுமியர் அடுத்திரண்டு ஆண்டில் கைம்மைப் பெண் ஆகையில் சமூகத்தில் அளவளாவும் பழக்கமும், படிப்பும் மறுக்கப்பட்டு வந்தது. எல்லாச் சாதிகளிலும் தீண்டாமையின் கொடுமை தலை விரித்து தாண்டவமாடியது. இவை எல்லாம் இன்று குறிப்பாக தமிழ்நாட்டில் மாறி நிற்கும் நிலைமையை நாம் காண்பது உறுதியானால்...இவரது சிந்தனை, எழுத்துக்கள், திரைப்பட மார்க்கமாக மக்களைச் சென்று அடைந்ததுதான் காரணம். இதற்கு அரசியலில் பங்காற்றினால் தான் முழுமையான பலன் அடையலாம் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார்.
இந்தி திணிப்பு கொள்கையை பகிரங்கமாக எதிர்த்த தோடல்லாமல் ,இருமொழி கொள்கையையை மாநிலத்தில் கடைப் பிடித்தவர். தாய் மொழி, உலகமொழி..என்பது வேண்டும் என்று கொள்கைப்பிடி கொண்டவர். மதிய அரசின் போக்கில் நாம் தப்பிக்க வேண்டுமானால் ஆங்கிலம் காற்றாக வேண்டும் என்று வலியுறுத்தியவர். தமிழுக்கு அது கேடயமாக அது இருக்கும் என்று சொன்னவர். முதலில் தமிழ் நாடு என்ற பெயர் நம் மாநிலத்திற்கு பெற்று தந்தவர். பதவியேற்ற ஒரு வருட காலத்திலேயே ,காமராஜர், இந்திரா காந்தியின் நன் மதிப்புக்கு ஆளானவர். இவர் மீது கொண்ட அளவில்லா பற்றுதலே எம். ஜி.ஆர். கட்சி துவங்கியது. கடமை,கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று சொல் மந்திரத்திற்குச் சொந்தகாரர். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று வலியுறுத்திச் சென்றவர்.
 

Monday, 16 April 2012

Open Window 1: நடைமுறையில்..

Open Window 1: நடைமுறையில்..: யாரிடத்திலும் வாழ்த்தும் முறையும் சரி ,பொருள் சேர்க்கும் முறையும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போவதில்லை. கல்விநிலையங்கள், வியாபாரஸ்தலங்கள், கோயி...

நடைமுறையில்..

யாரிடத்திலும் வாழ்த்தும் முறையும் சரி ,பொருள் சேர்க்கும் முறையும்
ஒன்றுக்கொன்று ஒத்துப் போவதில்லை.
கல்விநிலையங்கள், வியாபாரஸ்தலங்கள், கோயில்கள் போன்றவை
பல்கி பெருகவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
ஆனால் அனாதைப் பள்ளிகளும்,இல்லங்களும் பெருக வேண்டும் என்று
வாழ்த்தத்தான் எப்படி மனது வரும். சரி,
எந்த ஒரு அரசும் சிகரெட், மது குடிப்பது உயிருக்கு கேடு என்று சொல்லி விட்டு
அதன் விற்பனையைக் கூட்டுவதில் கவனம் எதற்காக வைக்க வேண்டும்..?
பொருள் ஆசை எங்கும் நேர்விகிதத்தில் தான் ஏறுகிறது.
படித்த கெட்டிக்காரர்கள் தாம் இந்த குறைபாட்டை சரி செய்ய வேண்டும்
.

Open Window 1: மின்வெட்டு

Open Window 1: மின்வெட்டு: சமீபத்திய அனுபவ உண்மை கிராமங்களில் என்னவென்றால் சண்டை சச்சரவுகள் பெரும்பாலும் குறைந்து விட்டது. காரணம் யாதெனில் தினசரி பனிரெண்டு மணி நேர ம...

மின்வெட்டு

சமீபத்திய அனுபவ உண்மை கிராமங்களில் என்னவென்றால்
சண்டை சச்சரவுகள் பெரும்பாலும் குறைந்து விட்டது.
காரணம் யாதெனில் தினசரி பனிரெண்டு மணி நேர மின்வெட்டு.
வெளிச்சத்தில் வெட்டிப் பேச்சு அங்கங்கே பேசமுடிவதில்லை.
நேரத்தில் வேலை செய்து நேரத்தில் உறங்கச் செல்கின்றனர்.
இதற்கு அரசுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

Friday, 3 February 2012

அறிஞர் அண்ணா

 அறிஞர் அண்ணா 
பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று .அவர் பேராற்றிய அரும்பணிகளை நமது தலைமுறையினருக்கு எடுத்து வைத்தல் நம் கடமையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நம்மிடையே மயங்கி பலனின்றி கிடந்த சுயமரியாதை உணர்வுகளை தட்டி எழுப்பி நம்மை முன்னேற்ற பாதையில் திசை திருப்ப வைத்த பங்கு தந்தை பெரியாருக்கென்றால் அதற்கான வழிமுறைகளை ,திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்து அரசியல் வழி நின்று அன்றைய மேதகு காங்கிரசாரை எதிர்த்து இட ஒதுக்கீட்டு முறையிலும், இந்தி தணிப்பு எதிர்ப்பு முறையிலும் பிற் பட்ட சமூகத்தினர் முன்னேறி வாழ செய்தவர் இவர் இதற்கு இவர் .கையாண்ட ஆயுதம் தமிழ் இலக்கியம்,மேடை பேச்சு , தேர்தலில் வெற்றிஆகும் . தாய்மொழி ,ஆங்கிலம் என்று இருமொழி திட்டம் வெற்றி கண்டவர்.இதனால் நம்மில் ஆங்கிலம் உலக அரங்கில் வளர மறைமுக ஆதரவு தந்தவர். இதை நாம் மறத்தல் ஆகாது.தாய் மொழி சிந்தனை அறிவே இறுதி வெற்றியை கொடுப்பது என்பது இவர்தம் ஆணித்தரமான கருத்து .தற்கால தலைமுறையினருக்கு இதை உரக்கக் சொல்வது நமது கடமை. நாம் பெற்ற படிப்பு, வசதி,தரமான வாழ்க்கை இவர் இயக்கத்தாலே கிடைத்தது என்பது மறக்கமுடியாத உண்மை.
நமது ஆத்மார்த்த அஞ்லிகள் இவருக்கு சமர்ப்பணம்.









கோதைதனபாலன்