Monday, 16 April 2012

Open Window 1: நடைமுறையில்..

Open Window 1: நடைமுறையில்..: யாரிடத்திலும் வாழ்த்தும் முறையும் சரி ,பொருள் சேர்க்கும் முறையும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போவதில்லை. கல்விநிலையங்கள், வியாபாரஸ்தலங்கள், கோயி...

நடைமுறையில்..

யாரிடத்திலும் வாழ்த்தும் முறையும் சரி ,பொருள் சேர்க்கும் முறையும்
ஒன்றுக்கொன்று ஒத்துப் போவதில்லை.
கல்விநிலையங்கள், வியாபாரஸ்தலங்கள், கோயில்கள் போன்றவை
பல்கி பெருகவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
ஆனால் அனாதைப் பள்ளிகளும்,இல்லங்களும் பெருக வேண்டும் என்று
வாழ்த்தத்தான் எப்படி மனது வரும். சரி,
எந்த ஒரு அரசும் சிகரெட், மது குடிப்பது உயிருக்கு கேடு என்று சொல்லி விட்டு
அதன் விற்பனையைக் கூட்டுவதில் கவனம் எதற்காக வைக்க வேண்டும்..?
பொருள் ஆசை எங்கும் நேர்விகிதத்தில் தான் ஏறுகிறது.
படித்த கெட்டிக்காரர்கள் தாம் இந்த குறைபாட்டை சரி செய்ய வேண்டும்
.

Open Window 1: மின்வெட்டு

Open Window 1: மின்வெட்டு: சமீபத்திய அனுபவ உண்மை கிராமங்களில் என்னவென்றால் சண்டை சச்சரவுகள் பெரும்பாலும் குறைந்து விட்டது. காரணம் யாதெனில் தினசரி பனிரெண்டு மணி நேர ம...

மின்வெட்டு

சமீபத்திய அனுபவ உண்மை கிராமங்களில் என்னவென்றால்
சண்டை சச்சரவுகள் பெரும்பாலும் குறைந்து விட்டது.
காரணம் யாதெனில் தினசரி பனிரெண்டு மணி நேர மின்வெட்டு.
வெளிச்சத்தில் வெட்டிப் பேச்சு அங்கங்கே பேசமுடிவதில்லை.
நேரத்தில் வேலை செய்து நேரத்தில் உறங்கச் செல்கின்றனர்.
இதற்கு அரசுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

Friday, 3 February 2012

அறிஞர் அண்ணா

 அறிஞர் அண்ணா 
பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று .அவர் பேராற்றிய அரும்பணிகளை நமது தலைமுறையினருக்கு எடுத்து வைத்தல் நம் கடமையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நம்மிடையே மயங்கி பலனின்றி கிடந்த சுயமரியாதை உணர்வுகளை தட்டி எழுப்பி நம்மை முன்னேற்ற பாதையில் திசை திருப்ப வைத்த பங்கு தந்தை பெரியாருக்கென்றால் அதற்கான வழிமுறைகளை ,திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்து அரசியல் வழி நின்று அன்றைய மேதகு காங்கிரசாரை எதிர்த்து இட ஒதுக்கீட்டு முறையிலும், இந்தி தணிப்பு எதிர்ப்பு முறையிலும் பிற் பட்ட சமூகத்தினர் முன்னேறி வாழ செய்தவர் இவர் . இதற்கு இவர் .கையாண்ட ஆயுதம் தமிழ் இலக்கியம்,மேடை பேச்சு , தேர்தலில் வெற்றிஆகும் . தாய்மொழி ,ஆங்கிலம் என்று இருமொழி திட்டம் வெற்றி கண்டவர்.இதனால் நம்மில் ஆங்கிலம் உலக அரங்கில் வளர மறைமுக ஆதரவு தந்தவர். இதை நாம் மறத்தல் ஆகாது.தாய் மொழி சிந்தனை அறிவே இறுதி வெற்றியை கொடுப்பது என்பது இவர்தம் ஆணித்தரமான கருத்து .தற்கால தலைமுறையினருக்கு இதை உரக்கக் சொல்வது நமது கடமை. நாம் பெற்ற படிப்பு, வசதி,தரமான வாழ்க்கை இவர் இயக்கத்தாலே கிடைத்தது என்பது மறக்கமுடியாத உண்மை.
நமது ஆத்மார்த்த அஞ்லிகள் இவருக்கு சமர்ப்பணம்.









கோதைதனபாலன் 

 

Sunday, 29 January 2012

Open Window 1: காந்தி அஞ்சலி

Open Window 1: காந்தி அஞ்சலி: இன்று மகாத்மா அஞ்சலி செலுத்தும் நாள் . பாரதத்தின் தந்தையை கும்பிட்ட கையில் மரணத்தை பாய்ச்சியவர் ஒரு இந்து ஆனதா ல் அவரினத்தை வெறுக்கும் பண்பு...

காந்தி அஞ்சலி

இன்று மகாத்மா அஞ்சலி செலுத்தும் நாள் . பாரதத்தின் தந்தையை கும்பிட்ட கையில் மரணத்தை பாய்ச்சியவர் ஒரு இந்து ஆனதா ல் அவரினத்தை வெறுக்கும் பண்பு உண்டோ .. ராணுவபிடிக்கு போகாமல் இந்திய குடியரசு காத்த இந்திரா காந்தியை நம்பிக்கையான காவலாளியே தொலைத்தான் என்றால் அவனினத்தை தொலைத்தோமா.. ராஜீவ் காந்தி உலக அரங்கில் நம் நாட்டை தற்காத்து மேம்படைய சென்றவழிக்கு புரியாத சுயநலமாய் சாய்த்த இலங்கைத்தமிழனை விட்டுக்கொடுத்தலும் நடப்பதுண்டோ.. இம்மரணங்கள் இந்திய பண்பாட்டின் விதியானால் நமக்கு நல்ல தலைவர்கள் எப்படி கிடைப்பார்கள்.. ? அத்தகைய தலைவர்களை போற்றும் பண்பு , சுயநலமில்லாத போக்குடன் நம் அனைவரிடமும் மிளிர வேண்டும். பல வேற்றுமைகளில் ஒற்றுமை காண்பதே நமது சிறப்பாக இருக்கட்டும். இதுவே நாம் காந்தியிடம் கற்ற , கற்கும், மற்றும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் பண்பாகும்.



ஒரு சிந்தனையின் 
வெளிப்பாடு... 






 கோதைதனபாலன்.